Published : 13 Dec 2016 04:08 PM
Last Updated : 13 Dec 2016 04:08 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய வீரர்களின்றியே தொடரை வென்றதால் டுபிளெஸிஸ் கேப்டன் பொறுப்புக்கு மிகத் தகுதியானவர் என்று கூறி ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார்.
“நான் உட்பட எந்த ஒரு தனிநபரின் நலனைக் காட்டிலும் அணியின் நன்மையே முக்கியம். அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு என்னைப் பணித்தது மிகப்பெரிய கவரவமாகக் கருதுகிறேன். ஆனால் நான் இரண்டு தொடர்களில் ஆட முடியாமல் போனது, வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரிலும் நான் ஆடுவது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க அணி மிகச்சிறப்பாக ஆடி தொடரை வென்றுள்ளது. எனவேதான் அணியின் நன்மைகளைக் கருதி டுபிளெஸ்ஸிஸ் கேப்டனாக தொடர வேண்டும்” என்றார்.
டிவில்லியர்ஸ் காயமடைந்த தருணத்தில் கேப்டனாக டுபிளெஸிஸ் நியமிக்கப்பட, இவரது தலைமையில் நியூஸிலாந்தை 1-0 என்று டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியாவை 5-0 என்று ஒருநாள் தொடரிலும், பிறகு ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் 2-1 என்றும் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
இந்நிலையில் தன் கேப்டன்சியை துறந்துள்ளார் டிவில்லியர்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT