Published : 12 Dec 2022 02:03 AM
Last Updated : 12 Dec 2022 02:03 AM

402 சர்வதேச போட்டிகள்... 11,778 ரன்கள்… 148 விக்கெட்டுகள் - யுவராஜ் சிங் பிறந்தநாள் பகிர்வு

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னர், அசத்தல் ஆல்-ரவுண்டர், அற்புத ஃபீல்டர் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, அண்டர் 19 உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். இன்று அவருக்கு பிறந்தநாள்.

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராக களம் கண்டார். இவர் களத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் போராட்ட குணம் கொண்டவர். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுத்து கர்ஜித்த சிங்கம் 'யுவி' என்பது அதற்கு உதாரணம்.

இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் கலக்கியவர். விக்கெட் டேக்கிங் பவுலரும் கூட. முக்கியமாக இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த தரத்திற்கு கொண்டு சென்ற வீரர்களில் இவரும் ஒருவர். ஆக்ரோஷமாக ஆடும் வீரர். சுழற்பந்து வீச்சை காட்டிலும் வேகப்பந்து வீச்சை கூலாக எதிர்கொண்டு ஆடுவார். 6.1 அடி உயரம் கொண்ட இவர் வானுயர பறக்கும் சிக்ஸர்களை விளாசுவதில் வல்லவர்.

அவரது சாதனை துளிகள் சில...

  • 40 டெஸ்ட், 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
  • அதன் மூலம் 11,778 ரன்களை குவித்துள்ளார்.
  • 148 விக்கெட்டுகளும் இதில் அடங்கும்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 8,701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
  • ஒட்டுமொத்தமாக 17 சதங்கள் மற்றும் 71 அரை சதங்கள் இதில் அடங்கும்.
  • இவரது ஸ்ட்ரைக் ரேட் 83.75
  • 1,245 பவுண்டரிகள் மற்றும் 251 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஒருநாள் இன்னிங்ஸில் (ஐசிசி நாக்-அவுட் 2000) 80 பந்துகளில் 84 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்திருந்தார்.
  • 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.
  • அதே போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் விளாசியிருந்தார்.
  • அதே தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் பதிவு செய்திருந்தார்.
  • 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வென்றவர்.
  • அந்த தொடரில் 4 அரை சதம், 1 சதம் உட்பட 362 ரன்களை குவித்து, 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்த சதத்தை பதிவு செய்திருந்தார்.
  • இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதியில் அரை சதம் விளாசியிருந்தார்.
  • 2017 வாக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்திருந்தார்.
  • 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x