Published : 06 Dec 2022 07:06 AM
Last Updated : 06 Dec 2022 07:06 AM
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கடந்து வந்த பாதை
மொராக்கோ
> 0-0 என்ற கணக்கில் குரோஷியாவுக்கு எதிராக டிரா.
> 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.
> 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது.
சிறப்பம்சம்: 1986-ல் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்பெயின்
> 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது.
> 1-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு எதிராக டிரா.
> 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி.
சிறப்பம்சம்: 2010-ல் சாம்பியன் பட்டம்
> வாலித் ரெக்ராகுயின் பயிற்சியின் கீழ் மொராக்கோவிளையாடிய கடைசி 6 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. கத்தார் உலகக் கோப்பையில் ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது.
> லூயிஸ் என்ரிக் பயிற்சியில் ஸ்பெயின் 2018ம் ஆண்டு உலகக் கோப்பையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறி இருந்தது. அதேவேளையில் 2020-ம் ஆண்டு யூரோ கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. தொடர்ந்து ஐரோப்பிய நேஷன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் வீழ்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT