Published : 03 Dec 2016 03:40 PM
Last Updated : 03 Dec 2016 03:40 PM
இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 115 அடி தூரத்திலிருந்து மொகமது ஃபைஸ் சுப்ரி அடித்த ஷாட்டில் பந்து ஒரு சமயத்தில் கிட்டத்தட்ட 90டிகிரி நேராகச் சென்று பிறகு பெரிய அளவில் வலது புறம் வளைந்து சென்று கோலின் வலது கோடியில் உள்ளே சென்று கோலாக மாறியது, கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியவில்லை. அபாரமான இந்த கோல் சமூக வலைத்தளங்களில் வைரலாக சென்றுள்ளது.
இந்நிலையில் ஃபிபா புஸ்காஸ் விருதுக்கு உலகம் முழுதும் நடைபெறும் ஆட்டங்களிலிருந்து 205 செப்டம்பர் முதல் 2016 செப்டம்பர் வரை அடிக்கப்பட்ட சுமார் 1000 கோல்களிலிருந்து டாப் 3 கோல்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் டாப் 3 கோல்களில் மெஸ்ஸி, நெய்மரையும் பின்னுக்குத் தள்ளியதாக இந்த மலேசிய வீரர் மொகமது ஃபைஸ் சுப்ரியின் கோல் பெரிய அளவில் கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.
இது குறித்து 29 வயது மொகமது ஃபைஸ் சுப்ரியின் கூறும்போது, “இதனை என்னால் மறக்க முடியாது. எனது ஆட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல இந்த விருது தேர்வு எனக்கு உத்வேகம் அளிக்கிறது” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “கால்பந்து மனிதர்களை ஒன்றிணைக்கிறது, கால்பந்து ரசிகர்களில் பல இனத்தவர்களும் உள்ளனர். சீனர்கள், இந்தியர்கள் மற்றும் மலேசியர்கள் இருக்கிறார்கள், இவர்கள் எனது கோலுக்கு வாக்களித்தனர்” என்றார்.
இந்தப் பட்டியலில் பிரேசிலின் மர்லோன் மற்றும் வெனிசூலா கால்பந்து வீராங்கனை ஸ்டெபானி ரோச் ஆகியோர் ஃபைஸ் சுப்ரியுடன் இணைந்துள்ளனர்.
வெற்றி பெறுபவர் பெயர் ஜனவரி 9-ம் தேதி ஜூரிச்சில் அறிவிக்கப்படுகிறது.
“விருதுக்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது, அதுவரை காத்திருப்போம், எனவே இது பார்ட்டிக்கான தருணம் அல்ல” என்கிறார் ஃபைஸ் சுப்ரி தன்னடக்கத்துடன்.
வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=4lRTLRCuGkE
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT