ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் வெளியேற வாய்ப்பு: ரமிஸ் ராசா

ரமிஸ் ராசா | கோப்புப்படம்
ரமிஸ் ராசா | கோப்புப்படம்
Updated on
1 min read

ராவல்பிண்டி: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராசா.

முன்னதாக, கடந்த அக்டோபர் வாக்கில் ஆசிய கோப்பை தொடர் இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்படலாம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்விக்கு அவர் இப்படி தெரிவித்தார்.

“ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை நாங்கள் நியாயமான முறையில் பெற்றோம். இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் எங்கள் அணி தொடரை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரமிஸ் ராசா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். பாகிஸ்தான் விளையாடாத தொடரை யாருமே பார்க்க மாட்டார்கள்” என பகிரங்கமாக அவர் சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in