Published : 02 Dec 2022 07:55 PM
Last Updated : 02 Dec 2022 07:55 PM

33 ஓவர்கள், 235 ரன்கள்: அறிமுகப் போட்டியில் பாகிஸ்தான் பவுலர் மோசமான சாதனை

ஜாஹித் மொஹமத்

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகவும் மோசமான சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் அறிமுக பவுலர் ஜாஹித் மொஹமத். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 33 ஓவர்கள் வீசி, 235 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார் அவர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் ஆகியுள்ளார் அவர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 657 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

அந்த இன்னிங்ஸில்தான் அறிமுக பவுலர் ஜாஹித் மொஹமத் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் துவம்சம் செய்துள்ளனர். மொத்தம் 33 ஓவர்கள் வீசிய அவர் 1 மெய்டன் உட்பட 235 ரன்களை விட்டுக் கொடுத்தார். 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அறிமுக போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை கொடுத்த பவுலர்கள்:

  • ஜாஹித் மொஹமத் (பாகிஸ்தான்) - 4 விக்கெட்டுகள், 235 ரன்கள் vs இங்கிலாந்து.
  • சுராஜ் ரந்திவ் (இலங்கை) - 2 விக்கெட்டுகள், 222 ரன்கள் vs இந்தியா (2010 )
  • ஜேசன் கிரெஜா (ஆஸ்திரேலியா) - 8 விக்கெட்டுகள், 215 ரன்கள் vs இந்தியா (2008)
  • ஓமரி பேங்க்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 3 விக்கெட்டுகள், 204 ரன்கள் vs ஆஸ்திரேலியா (2003)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x