Published : 02 Dec 2022 04:47 PM
Last Updated : 02 Dec 2022 04:47 PM
பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், திடீர் உடல்நல பாதிப்பால் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நேரலை வர்ணனையில் இருந்து வெளியேறியுள்ளார். அதோடு அவர் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு அணிகளும் தற்போது பெர்த் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் மதிய நேர இடைவேளையின்போது பெர்த் மைதானத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். அதன்பிறகு அவர் மைதானத்திற்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 மற்றும் 2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. 47 வயதான அவர் 2002 முதல் ஒருநாள் கிரிக்கெட் அணியையும், 2004 முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியையும் வழிநடத்தி வந்தார். கடந்த 2012 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
168 டெஸ்ட், 375 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகள் என மொத்தம் 27,483 ரன்களை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இயங்கி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT