Published : 30 Dec 2016 10:22 AM
Last Updated : 30 Dec 2016 10:22 AM
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதான இவானோவிச் 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டில் தொடர்ச்சியாக 12 வாரங்கள் டென்னிஸ் தரவரி சையில் முதலிடம் வகித்தார்.
இவானோவிச் கூறும்போது, “தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது கடினமான முடிவு தான். 2008-ல் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற நான் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித் தேன். டென்னிஸ் மூலம்தான் கனவிலும் எதிர்பாராத வெற்றி களையும், பாராட்டுகளையும் என்னால் பார்க்க முடிந்தது.
டபிள்யூடிஏ டூர் பட்டங்களை 15 முறை நான் வென்றுள்ளேன். தற்போது உயர் நிலை போட்டி களில் சிறந்த திறனுடன் நீண்ட நாட்களுக்கு என்னால் சிறப்பாக விளையாட முடியாது. எனவே டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி செல்வதற்கு இதுவே சரியான நேரம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT