Published : 10 Dec 2016 07:30 PM
Last Updated : 10 Dec 2016 07:30 PM
மும்பை டெஸ்ட் போட்டியில் திறம்பட ஆடி சதம் எடுத்து ஆடி வரும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள், டி20 என்று 3 வடிவங்களிலும் 50 ரன்கள் என்ற சராசரியை வைத்துள்ளார்.
இதனையடுத்து முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உள்ளிட்டோர் விராட் கோலியை புகழ்ந்து ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
ஹர்ஷா போக்ளே: இந்த சதம் ஒரு அபாரமான கிளாஸ் சதம். அவரது உச்சத்தில் தொடர்கிறார், வளர்ந்து கொண்டே செல்கிறார் கோலி.
மைக்கேல் வான்: ஸ்பெஷல் பிளேயர்.. விராட் கோலி ஒரு ஜீனியஸ்..
அயாஸ் மேமன்: விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ் சதம்
ஆகாஷ் சோப்ரா: பல வீரர்களிடையெ விராட் கோலி தனித்து நிற்கிறார், இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர்.
பியர்ஸ் மோர்கன்: தி நியூ லிட்டில் மாஸ்டர்...விராட் கோலி.
விவிஎஸ். லஷ்மண்: இன்னுமொரு ஆச்சரியகரமான ஆட்டம்.. தகவமைத்துக் கொள்ளுதல், முதிர்ச்சி, பொறுப்பு... சிறப்பு வாய்ந்த ஒரு வீரரின் கிளாஸ் ஆக்ட்.
ஹர்பஜன் சிங்: வெல் பிளேய்ட் விராட். சூப்பர் பேட்டிங்! இங்கிலாந்தினால் 4,5-ம் நாளில் பேட் செய்ய முடியாது.
மொகமது கயீஃப்: தலைவணங்குகிறேன்! தீராத தாகம் நம்பமுடியவில்லை...அனைத்து வடிவங்களிலும் 50க்கும் மேல் சராசரி. இந்தப் போட்டியை காப்பாற்ற இங்கிலாந்து போராட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT