Published : 09 Dec 2016 08:48 AM
Last Updated : 09 Dec 2016 08:48 AM
2017-ம் ஆண்டுக்கான ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி யில் செரீனா வில்லியம்ஸ், ரோஜர் பெடரர் ஆகியோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக போட்டியின் இயக்குநர் கிரெய்க் டிலே தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ் லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும் ஜனவரி 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மெல் போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதில் உலக டென்னிஸ் தரவரிசை யில் புதிதாக முதல் இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர் உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை பட்டம் வென்றுள்ள அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் கடந்த செப்டம்பரில் தோள்பட்டை காயம் காரணமாக போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர், ஸ்டெபி கிராபின் 22 பட்டங்கள் சாதனையை கடக்கும் முனைப்பில் இம்முறை ஆஸ்திரேலிய ஓபனை எதிர்கொள்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராகும் விதமாக ஜனவரி மாத தொடக்கத்தில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியில் செரீனா தனது சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து களமிறங்க உள்ளார்.
உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-வது முறையாக பட்டம் வெல் லும் முனைப்புடன் இம்முறை களமிறங்க தயாராக உள்ளார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முழங்கால் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ள தால் ஆஸ்திரேலிய ஓபனில் மீண்டும் கால்பதிக்க உள்ளார்.
காயம் காரணமாக பெடரர், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளை யாடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராகும் விதமாக அவர், பெர்த் நகரில் நடைபெற உள்ள ஹாப்மேன் கோப்பையில் விளையாட முடிவு செய்துள்ளார்.
ஸ்பெயினின் ரபேல் நடாலும் தற்போது முழு உடல்தகுதியை அடைந்துள்ளதால் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட உள்ளார். அவர் பிரிஸ்பன் போட்டியில் இருந்து அடுத்த சீசனை தொடங்க இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் இயக்குநர் கிரெய்க் டிலே கூறும்போது, “ரோஜர், பெடரர், நடால், செரீனா ஆகியோர் போட்டியில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளனர். தரவரிசை யில் முதல் 99 இடங்களுக்குள் உள்ளவர்களில் அசரன்கா மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளவில்லை. 2 முறை சாம்பிய னான பெல்லாரசை சேர்ந்த அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT