Published : 18 Nov 2022 09:07 PM
Last Updated : 18 Nov 2022 09:07 PM
புதுச்சேரி: கத்தார் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க 32 அணிகளின் வீரர்கள் மற்றும் அந்தந்த அணிகளின் ரசிகர்கள் என அனைவரும் உலக அளவில் ஆயத்தமாகி வருகின்றனர். எப்படியும் அடுத்த சில நாட்களுக்கு பூமிப்பந்தை விட மைதானத்தில் கால்பந்துகள் அதிக அளவில் சுழல உள்ளன.
இந்த வேளையில் கால்பந்தாட்ட உலகமே ஒருவரை மிஸ் செய்கிறது. அது அந்த விளையாட்டின் மாவீரரான மரடோனா. அவர் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நின்றபடி பல கோடி கண்களின் கவனத்தை ஈர்க்கும் காந்த சக்தியை பெற்றவர். கடந்த நான்கு ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நடந்துவிட்டது. கரோனா தொற்று தொடங்கி மரடோனா பிரிவு வரையில் அது நீள்கிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு மரடோனா இல்லாத ஓர் உலகக் கோப்பை தொடரை உலகம் பார்க்க உள்ளது. 1977 முதல் 1994 வரை அர்ஜென்டினா அணிக்காக மாயம் செய்து வந்தது அவரது கால்கள். அதன் பிறகு களத்திற்கு வெளியே நின்று அணிக்கு உற்சாகம் கொடுக்கும் பணியை செய்தது. களத்தில் செய்து வந்ததை வெளியே நின்றும் அவர் செய்தார்.
கடந்த 2018 ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வீரர்களின் ரியல் டைம் ரியாக்ஷனை காட்டிலும் மரடோனாவின் ரியாக்ஷனை கேட்ச் செய்ய கண்கொத்தி பாம்பாக கேமராக்கள் அவரை ஃபோக்கஸ் செய்திருந்தன. அவரும் வஞ்சம் வைக்கமால் வழக்கமான பணியில் உற்சாகம் கொடுத்திருந்தார். அதில் சில சர்ச்சை ஆனது. இருந்தாலும் கடந்த முறை ரவுண்ட் ஆப் 16 சுற்றுடன் அர்ஜென்டினா வெளியேறியது.
Actual Headline: “RUSSIAN STADIUMS TO ALLOW COCAINE, CANNABIS AND HEROIN AT 2018 FIFA WORLD CUP”
Actual Diego Maradona: pic.twitter.com/2HrwJDrd2S— Derek Kramer (@Derek_Kramer11) June 16, 2018
இந்த முறை மரடோனா இல்லை என்றாலும் ரஷ்யாவில் விட்டதை கத்தாரில் அவரது ஆஸ்தான சிஷ்யரான மெஸ்ஸி கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்பந்தாட்டத்தில் எத்தனையோ வீரர்கள் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் மரடோனா சாம்பியனுக்கு சாம்பியன். அதற்கு சான்று 1986 உலகக் கோப்பையில் அவர் பதிவு செய்த ‘கோல் ஆப் தி செஞ்சுரி’ கோல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT