Published : 19 Nov 2016 02:11 PM
Last Updated : 19 Nov 2016 02:11 PM
விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆனால் பாலோ ஆன் தரவில்லை. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட் செய்கிறது.
பென் ஸ்டோக்ஸ் (70), பேர்ஸ்டோ (53), அடில் ரஷீத் (32) ஆகியோரது ஸ்கோர் மூலம் இங்கிலாந்து 103/5 என்ற நிலையிலிருந்து இன்று 255 ரன்கள் எடுக்க முடிந்தது. இன்று உமேஷ் யாதவ் உணவு இடைவேளைக்கு முன்பாக பேர்ஸ்டோவை பவுல்டு செய்தது ஒரு சிறிய தொடக்கத்தை கொடுத்தது.
அதன் பிறகு ஸ்டோக்ஸ், பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார். இதில் பிராட், ஆண்டர்சன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் விழ்த்தியதால் அஸ்வினுக்கு அடுத்த இன்னிங்ஸில் முதல் பந்து ஹாட்ரிக் வாய்ப்பு பந்தாகும்.
மூன்று இடது கை பேட்ஸ்மென்களுமே எல்.பி.டபிள்யூ முறையில் அஸ்வினிடம் வீழ்ந்தனர். மூன்று பந்துகளுமே திரும்பவில்லை. ஸ்டோக்ஸ் மட்டும் ரிவியூ செய்தார், பயனில்லாமல் போனது, ஜடேஜா, அன்சாரியை வீழ்த்தியதும் எல்.பி.முறையில்தான்.
இன்று வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுகளில் 4 எல்.பி.க்கள் 1 பவுல்டு, எந்த எல்.பி.யும் திரும்பிய பந்துகளில் அல்ல. அடில் ரஷீத் 73 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.
2-வது புதிய பந்தில் உமேஷ், ஷமி பவுண்டரிகளை கொடுத்தனர். பிராட் 13 ரன்கள் பங்களிப்பு செய்தார். பிராட் காயம் என்று கூறப்பட்டது, ஆனால் அவர் பேட்டிங்கிலும் இறங்கி தற்போது பந்து வீசவும் செய்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 29.5 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெயந்த் யாதவ் 38 ரன்களுக்கு 1 விக்கெட் இன்று பெரிதாக இவருக்கு பிட்சிலிருந்து உதவியில்லை.
200 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் பிட்ச் இன்னும் உடைய வேண்டியுள்ளதாலும் பவுலர்களுக்கு ஓய்வு கிடைக்குமாறும் மீண்டும் இந்திய அணி பேட் செய்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு ஸ்பின் பயங்கரம் இன்னும் இந்தப் பிட்சிலிருந்து வெளியாகவில்லை. ராகுல், விஜய் இறங்கி ஆடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT