Published : 15 Nov 2022 09:10 PM
Last Updated : 15 Nov 2022 09:10 PM
எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவரை அந்த அணி இன்று வெளியிட்ட தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் பிரதான வீரராக வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் ட்விட்டர் தளத்தில் வீடியோ பாடல் மூலம் தான் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டதை சூசகமாக அன்றே ஜடேஜா சொல்லி இருந்தார் என சொல்லப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 142 போட்டிகளில் ஜடேஜா விளையாடி உள்ளார். 1440 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 105 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். அபார ஃபீல்டரான அவர் 69 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இருந்தாலும் கடந்த சீசனில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார். ஒருகட்டத்தில் அணியில் இருந்தும் விலகினார்.
இந்த சூழலில் கடந்த மாதம் ஜடேஜா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் ஜடேஜா பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்தது. அந்த பாடலின் வரிகள் மேலும் இது குறித்த சந்தேகத்தை எழுப்பியது.
— Ravindrasinh jadeja (@imjadeja) October 19, 2022
அடுத்த சீசனில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2023 சீசனில் விளையாட உள்ளது. அங்கு ஜடேஜாவின் இருப்பு அணிக்கு அவசியம் என தோனி சொன்னதாக தகவல் வெளியானது. அதன்படி இப்போது ஜடேஜா அணியில் தக்க வைக்கப்பட்டார். அதோடு அந்த பாடல் மூலம் அப்போதே தான் சென்னை அணியில் தக்க வைக்கப்பட்டதை ஜடேஜா சூசகமாக சொல்லி உள்ளார் என சொல்லப்படுகிறது.
“எல்லாம் நலம்” என சிஎஸ்கே அணியின் தக்க வைக்கப்பட்டதும் ஜடேஜா தோனியுடன் இருக்கும் போட்டோவை ட்வீட் செய்துள்ளார். அதில் ரீஸ்டார்ட் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
Everything is fine #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT