Published : 10 Nov 2022 02:31 PM
Last Updated : 10 Nov 2022 02:31 PM
மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் தமிழ் வர்ணனையில் சில நிமிடங்கள் இணைந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்போது தனது கிரிக்கெட் நினைவுகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்த போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா தற்போது பேட் செய்து வருகிறது. இந்த நிலையில் தான் லோகேஷ் வர்ணனையாளர்களுடன் நேரலையில் இணைந்தார்.
அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேர்த்தியாக பதில் அளித்தார்.
>முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ரிஷிகேஷ் கனித்கர் குறித்து தனது நினைவுகளை லோகேஷ் பகிர்ந்திருந்தார்.
>இந்தியா - இங்கிலாந்து 2007 டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசி இருந்தார்.
>யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் குறித்தும் பேசி இருந்தார்.
>இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத தருணமாக இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்திய போட்டியில் கங்குலி சட்டையை கழட்டி சுழற்றிய நினைவுகளையும் சொல்லி இருந்தார்.
>அஜய் ஜடேஜா மற்றும் விராட் கோலியின் ஹேர்ஸ்டைல் பிடிக்கும் என பகிர்ந்திருந்தார்.
>அவரிடம் கிரிக்கெட்டின் தல மற்றும் தளபதி யார் என கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் ‘பாஸ்’ செய்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT