Published : 07 Nov 2022 05:35 PM
Last Updated : 07 Nov 2022 05:35 PM
துபாய்: கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரசா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் போன்ற வீரர்களும் இதற்கான பரிந்துரையில் இருந்தனர். ஆனாலும், அவர்களை கோலி முந்தி விருதை வென்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் கோலி மொத்தம் 4 இன்னிங்ஸில் தான் பேட் செய்திருந்தார். அதில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 82 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக எடுத்த 62 ரன்களும் அடங்கும். அதே போல குவாஹாட்டி 28 பந்துகளில் 49 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர் விளாசி இருந்தார். இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் என்ற நிலையில் இருந்த அணியை மீட்டு வெற்றி பெற செய்தார் கோலி. அதோடு இந்தியா இப்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அதற்கு கோலியின் ஆட்டமும் பிரதான காரணம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதற்காக வாக்களித்து இருந்தனர்.
“அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக நான் தெரிவு செய்யப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். அதுவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஐசிசி குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. என்னுடன் பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களுக்கு பாராட்டுகள். எனது அணியினருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முழு ஆதரவு கொடுத்திருந்தனர்” என கோலி தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரிவில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மாவும் இதற்கான பரிந்துரையில் இருந்தன.
A batting stalwart wins the ICC Men's Player of the Month award for October after some sensational performances
Find out who he is— ICC (@ICC) November 7, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT