Published : 07 Nov 2022 01:10 AM
Last Updated : 07 Nov 2022 01:10 AM
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சூப்பர் 12 போட்டியின் இறுதி நாளான நேற்று (ஞாயிறு) நடைபெற்ற போட்டிகளில் கிடைத்த முடிவுகளை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இது உள்ளது. ஏனெனில் இரு அணிகளும் தற்போது சூப்பர் 12 ‘குரூப்-2’இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதே இதற்கு காரணம்.
இரு அணிகளும் கடைசியாக கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தன. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பிறகு சுமார் 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகளை வென்றது. இருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குரூப்-2 பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
மறுபக்கம் பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பெற்று அரையிறுதிகக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. இருந்தாலும் அதே பிரிவில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றி மற்றும் 2 தோல்வி, ஒரு போட்டியில் முடிவு எட்டப்படாத காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதும் பிரதான காரணம்.
வரும் புதன்கிழமை அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. வியாழன் அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர பலப்பரீட்சை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இறுதிப் போட்டி வரும் 13-ம் தேதி அன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
It's my birthday on 13th November and there won't be any biggest birthday gift for me if Pakistan beats India in the final and brings the trophy home
— Sehar Shinwari (@SeharShinwari) November 6, 2022
The prospect of an India Pakistan final seems very, very exciting. #T20WorldCup
— Prakash Mallya (@PrakashMallya) November 6, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT