Published : 02 Nov 2022 03:52 PM
Last Updated : 02 Nov 2022 03:52 PM
அடிலெய்ட்: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். இதன்மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே வசம் இருந்த சாதனையை அவர் தகர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் 16 ரன்களை எடுத்தபோது 1016 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனேவை கடந்தார். அதன்மூலம் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆனார். டி20 உலகக் கோப்பையில் அதிக அரைசதம் விளாசிய வீரரும் அவர்தான். மொத்தம் 13 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் விளையாடும் 5-வது டி20 உலகக் கோப்பை தொடர் இது. இதில் அவரது அதிகபட்ச ரன்கள் 89 (நாட்-அவுட்).
23 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 1065 ரன்களை அவர் குவித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 அரைசதங்களுடன் 220 ரன்களை குவித்துள்ளார். 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள்
Yet another milestone unlocked @imVkohli becomes the leading run-getter in the Men's #T20WorldCup!
Follow the match https://t.co/Tspn2vo9dQ#TeamIndia | #INDvBAN pic.twitter.com/P6Ipxt4XRG— BCCI (@BCCI) November 2, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT