Published : 31 Oct 2022 08:43 PM
Last Updated : 31 Oct 2022 08:43 PM

நியூஸி., வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தலைமை தாங்கும் வெவ்வேறு கேப்டன்கள்

இந்திய அணி வீரர்கள் | கோப்புப் படம்

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நியூஸிலாந்து பயணத்தில் டி20 தொடருக்கான அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான அணியை தவானும் தலைமை தாங்க உள்ளனர்.
  • ரோகித் சர்மா, கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு நியூஸிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் வங்கதேச தொடருக்கு அணியில் இணைகிறார்கள்.
  • டி20 தொடருக்கான அணியின் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
  • வங்கதேச பயணத்தில் அணியுடன் ஜடேஜா இணைகிறார்.

நியூஸிலாந்து தொடருக்கான டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

> 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது.

நியூஸிலாந்து தொடருக்கான ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

>3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் 25 முதல் 30 வரையில் நடக்கிறது.

வங்கதேச தொடருக்கான ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயால்.

>3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 4 முதல் 10 வரையில் நடைபெறுகிறது.

வங்கதேச தொடருக்கான டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

>2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 14 முதல் 26 வரையில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x