T20 WC | ‘ஐசிசி தொடர்களை ராஜஸ்தானில் நடத்தலாம்’ - தொடர் மழையால் வெகுண்டெழுந்த ரசிகர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகளில் சில ஆட்டங்கள், ஆஸ்திரேலியாவில் விடாது பெய்து வரும் மழை காரணமாக வாஷ் அவுட் ஆகியுள்ளன. இந்நிலையில், இதைப் பார்த்து வெகுண்டெழுந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சூப்பர் 12 சுற்றில் மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் இதுவரை கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டியின் முடிவு, மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கிய போட்டி என கருதப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அது தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளுக்கு கதவடைப்பு போல உள்ளது.

முக்கியமாக சூப்பர் 12 சுற்றில் கைவிடப்படும் போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஏதும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாக்-அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் ரியாக்‌ஷன்

  • வரவிருக்கும் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரையும் ராஜஸ்தானில் நடத்த வேண்டும் என ஐசிசி-யை முறையிடுகிறோம். இங்கு மழையே இல்லை.
  • தொடரை நடத்தும் நாட்டின் வானிலை நிலவரத்தை தொடருக்கான அட்டவணையை தயார் செய்வதற்கு முன்னர் ஐசிசி பரிசீலிக்க வேண்டும்.
  • இதற்கெல்லாம் காரணம் ஐசிசிதான். தொடரை நடத்த வானிலை சாதகம் இல்லாத இடத்தில் நடத்த ஆர்வம் காட்டுகிறது.
  • சிக்சர் மழைக்கு பதிலாக வான் மழை பொழிந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in