Published : 25 Oct 2022 06:13 PM
Last Updated : 25 Oct 2022 06:13 PM
கடந்த 2019-க்கு பிறகு முதல் முறையாக BWF உலக பேட்மிண்டன் தரவரிசையில் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. 27 வயதான அவர் அண்மையில் வெளியான தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளின்போது அவர் காயம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் சிந்து. சுமார் 87,218 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். இந்த புள்ளிகளை அவர் 26 தொடர்களில் விளையாடி பெற்றது. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் இப்போது பயிற்சியை தொடங்கி உள்ளார்.
கடந்த 2019, செப்டம்பர் வாக்கில் அவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக அளவில் டாப் 5 வீராங்கனைகளில் ஒருவராக இருந்தார். அதன்பிறகு அந்த இடத்தை இழந்தார். நெடு நாட்களாக அவர் 7-ம் இடத்தில் நீடித்து வந்தார். கரோனா தொற்று காரணமாக தரவரிசை பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த தரவரிசையில் அதிகபட்சமாக 2-வது இடத்தை பிடித்தது சிந்துவின் சாதனையாக உள்ளது.
இதேபோல பிரணாய், லக்சயா சென் ஆகியோரும் ஆடவர் பிரிவில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி போன்ற இந்திய வீரர்கள் இரட்டையர் பிரிவில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT