Published : 18 Oct 2022 08:50 AM
Last Updated : 18 Oct 2022 08:50 AM
கான்பரா: ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், அனுபவ வீரருமான டேவிட் வார்னர் இருப்பார் என்ற பேச்சு ஒருபக்கம் இருந்தது. அவரை ஆதரிக்கும் விதமாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேசி இருந்தனர். ஆனாலும் அவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை இழந்துள்ளார் என தெரிகிறது.
இந்நிலையில், 29 வயதான கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் கடந்த 2021 நவம்பர் வாக்கில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அணியின் டெஸ்ட் செயல்படும் அருமையாக உள்ளது. இப்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகியுள்ளார். வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர் முதல் கம்மின்ஸ் கேப்டனாக இயங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர் அவர். 43 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் போன்ற ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இப்போது கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pat Cummins has been named Australia's 27th ODI captain pic.twitter.com/T0p02wwjiP
— Cricket Australia (@CricketAus) October 17, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT