Published : 23 Nov 2016 08:27 PM
Last Updated : 23 Nov 2016 08:27 PM
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வியாழனன்று தொடங்குகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
3 புதிய பேட்ஸ்மென்களான நிக் மேடின்சன், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் களமிறக்கப்படுகின்றனர், இதில் மேடின்சனை ‘கேம் பிரேக்கர்’என்று வர்ணித்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் ஸ்மித். பந்து வீச்சில் ஜேக்சன் பேர்ட் களமிறக்கப்படுகிறார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது. அந்த அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்த டெஸ்ட் போட்டியை சந்திக்கிறது.
அதேவேளையில் சொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி மீண்டும் திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அந்த அணியில் கடந்த இரு போட்டிகளில் விளையாடிய 6 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக 4 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று தொடங்கும் போட்டிக்கான விளையாடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அறிவித்தார். இதன்படி, 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஜேக்சன் பேர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியில் மஹராஜுக்குப் பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் பந்தின் தையலை பேட்ஸ்மென்கள் சரிவர பார்க்க முடியாது என்பதால் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப், நிக் மேடின்சன், மேத்யூவ் வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸல்வுட், நாதன் லயன், ஜேக்ஸன் பேர்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT