Published : 17 Oct 2022 02:50 PM
Last Updated : 17 Oct 2022 02:50 PM
ஹோபார்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஸ்காட்லாந்து அணி. இந்த வெற்றி தங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலானது என அந்த அணியின் கேப்டன் பெரிங்டன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளும் குரூப் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. அந்த அணி சார்பில் மன்சே அதிகபட்சமாக 53 பந்துகளில் 66 ரன்களை சேர்த்திருந்தார்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி விரட்டியது. ஆனால், 18.3 ஓவர்களில் வெறும் 118 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 33 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஸ்காட்லாந்து அணி சார்பில் பந்து வீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தனர். மார்க் வாட் 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 24 பந்துகளில் 14 பந்துகள் ரன் ஏதும் எடுக்கப்படாத டாட் பால்கள் ஆகும்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் இந்த ஃபார்மெட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை தங்களது முதல் போட்டியில் வீழ்த்தி உள்ளன. குட்டி அணிகளின் இந்த அப்செட் நிச்சயம் இந்தத் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
What a performance
Scotland get their campaign underway with a commanding victory against West Indies #T20WorldCup | #WIvSCO | https://t.co/zYWEnEHtif pic.twitter.com/rWZPmS9wyR— T20 World Cup (@T20WorldCup) October 17, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT