Published : 05 Oct 2022 05:26 AM
Last Updated : 05 Oct 2022 05:26 AM

'பும்ராவுக்கு மாற்று வீரரை இன்னும் அடையாளம் காணவில்லை' - ரோகித் சர்மா தகவல்

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 228 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அதில் ஒன்று ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர். காயத்தால் அவதிப்பட்டுவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்றுவீரர் என்ற யாரையும் இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதுபற்றி பேசிய ரோகித், “உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா வெளியேறி இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். அவருக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்க வேண்டும். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, சில நண்பர்கள் உள்ளார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா சென்ற பின்பே அந்த முடிவு எடுக்கப்படும்.

பந்துவீச்சில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, இந்தியா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். பவர்பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் இன்னும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதையும் சோதிக்க வேண்டும். இன்னும் அதை நோக்கி உழைத்து வருகிறோம். நண்பர்களுக்கு இன்னும் நிறைய தெளிவு தேவை, அதைச் செய்வது என் வேலை. தற்போதுள்ள அணியில் பலர் ஆஸ்திரேலியா சென்றதில்லை. மொத்தமே 7-8 பேர் வரையே இதுவரை ஆஸ்திரேலியா சென்றுள்ளோம். அதனால்தான் இம்முறை நாங்கள் அங்கு சீக்கிரமாகச் செல்கிறோம். மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு பயிற்சி ஆட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இரண்டு ஐசிசி பயிற்சி ஆட்டங்கள் உள்ளன." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x