Published : 04 Oct 2022 06:35 AM
Last Updated : 04 Oct 2022 06:35 AM
செங்குடு: டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய மகளிர் அணி எகிப்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் முதல் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 11-6, 11-4, 11-1 என்ற கணக்கில் ஹனா கோடாவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த மணிகா பத்ரா 8-11, 11-6, 11-7, 2-11, 11-8 என்ற செட்கணக்கில் தினாவை வீழ்த்தினார்.
3-வது ஆட்டத்தில் இந்தியாவின் தியா சித்தலே 11-5, 10-12, 11-9, 9-11,4-11 என்ற செட் கணக்கில் யூஸ்ரா ஹெல்மியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் ஜா அகுலா 11-8, 11-8, 9-11, 11-6 என்ற செட் கணக்கில் தினா மெஷ்ரெஃப்பை தோற்கடித்தார். இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். லீக் சுற்றின் முடிவில் இந்திய மகளிர் அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது. இந்திய ஆடவர் அணி தரப்பில் சத்தியன், மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT