Published : 01 Nov 2016 11:05 AM
Last Updated : 01 Nov 2016 11:05 AM
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேச மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் தட்டுத்தடுமாறியே இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது.
2-வது டெஸ்ட்டில் 100 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காமல் இருந்த நிலையில் அடுத்த 64 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத் தது. இதனால் 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததுடன் போட்டியை 3 நாட்களில் முடிவுக்கும் கொண்டு வந்தது இங்கிலாந்து அணி.
ஒரே ஷெசனில் இங்கிலாந்து அணியை சுருட்டிய வங்கதேச அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. சுழற்பந்து வீச்சில் இங்கி லாந்து அணி ஆட்டம் கண்டுள் ளதால் இந்திய டெஸ்ட் தொடர் அந்த அணிக்கு கடும் அச்சுறுத்த லாக அமையக்கூடும் என கருதப் படுகிறது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுழல் ‘மாயாவி’ அஸ்வினை இங்கிலாந்து அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கவலை தற்போது அணியை தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய சுற்றுப் பயணம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இயன் போத்தம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் சரிந்தது உலக கிரிக்கெட்டில் நடை பெறக்கூடியதுதான். அங்குள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச் சுக்கு சாதகமான முறையில் வடி வமைக்கப்பட்டதுதான். டெஸ்ட் டில் தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வீசும்போதே அடுத்து என்ன நடைபெறும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வங்கதேச அணிக்கு இது சிறப்பான வெற்றிதான். ஆனால் அவர்கள் இதேபோன்று தங்களது நாட்டுக்கு வெளியிலும் வெற்றி பெற வேண்டும். அதுதான் அவர்களுக்கு சிறந்த சோதனையாக இருக்கும். தற்போது இங்கிலாந்து அணியும் அதை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் திறனை வங்கதேசத்தில் நடந்ததை வைத்து தீர்மானிக்கக்கூடாது. இந்திய சுற்றுப்பயணத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்துதான் இங்கிலாந்து அணியின் திறனை தீர்மானிக்க முடியும்.
இங்கிலாந்து அணியானது ஆடுகளத்துக்கு தகுந்தபடி சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங்கை கையாளும் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அவர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
ஸ்டூவர்ட் பிராடு களத்தில் கடினமாக செயல்படக்கூடியவர். ஆப் ஸ்டெம்புகளை நோக்கி வீசிய போட்டிகளில் அவர் அதிக விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். வங்கதேச தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது சுழற்சி முறை யிலான அடிப்படையில்தான்.
பென் ஸ்டோக்ஸ் அற்புதமான வீரர். அவரது ஆட்டத்தை பார்வை யிட நான் விரும்புவேன். ஸ்டோக்ஸின் அணுகுமுறை, ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். சாலையை கடப்பவர் கூட அவரின் ஆட்டத்தை திரும்பி பார்ப்பார்கள். ஸ்டோக்ஸ் தற்போது கற்றுக்கொள்ளும் கட்டத்தில் உள்ளார். ஆனால் எதையும் அவர் விரைவாக கற்றுக்கொள்கிறார்.
இவ்வாறு இயன் போத்தம் கூறினார்.
குக் தலைமையிலான இங்கி லாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நாளை இந்தியா வந்து சேருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT