Published : 27 Sep 2022 06:03 PM
Last Updated : 27 Sep 2022 06:03 PM
ஹொவ்: நடப்பு கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் 139 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவர் இந்தத் தொடரில் கிளெம்மாகன் (Glamorgan) அணிக்காக விளையாடி வருகிறார்.
23 வயதான கில் இந்திய அணியில் கடந்த 2019 முதல் விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவர் விளையாடி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக மட்டுமல்லாது கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி உள்ளார். இந்நிலையில், முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்றார்.
அண்மையில் அவர் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாட கிளெம்மாகன் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவர் இங்கிலாந்தில் அந்த அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
தற்போது ஹொவ் மைதானத்தில் சசெக்ஸ் அணிக்கு எதிரான கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 போட்டியில் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். மொத்தம் 139 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். இதில் 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். கவுன்டி கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது. முதல் தர கிரிக்கெட்டில் அவரது எட்டாவது சதம்.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக 4 சதங்கள் அவர் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்துள்ளார். 65 முதல் தர கிரிக்கெட் இன்னிங்ஸ் விளையாடி 3,121 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 16 அரை சதங்களும் அடங்கும்.
Shubman Gill makes a maiden Glamorgan century
123 balls, 12 fours, 2 sixes. Well batted, Shubman!
Glamorgan 245/4
: https://t.co/7M8MBwgNG2#SUSvGLAM | #GoGlam pic.twitter.com/D7fiC5jYmf— Glamorgan Cricket (@GlamCricket) September 27, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT