Published : 25 Sep 2022 08:48 PM
Last Updated : 25 Sep 2022 08:48 PM
ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் அபாரமான தொடக்கத்தை கொடுத்திருந்தார். டிம் டேவிட் சிறப்பாக ஆட்டத்தை முடித்து கொடுத்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 25) ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்களை குவித்தது அந்த அணி.
குறிப்பாக கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார் அவர். இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிவேக அரை சதம் இது. ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்திருந்தனர். பின்னர் வந்த இங்க்லீஸ் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த மேத்யூ வேட், 1 ரன் எடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவர் வரை பேட் செய்த டீம் டேவிட், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் பதிவு செய்துள்ள முதல் அரை சதம் இது. டேனியல் சாம்ஸ், 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா சார்பில் அக்சர் படேல் (3 விக்கெட்), புவனேஷ்வர், சஹால் மற்றும் ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி இலக்கை தற்போது விரட்டி வருகிறது.
ICYMI - Rocket throw from the deep by @akshar2026
And then, a bit of luck on #TeamIndia's side...
Watch how Maxwell got out.
Full video - https://t.co/3H42krD629 #INDvAUS pic.twitter.com/71YhhNjakw
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT