Published : 18 Sep 2022 11:55 PM
Last Updated : 18 Sep 2022 11:55 PM
பெல்கிரேடு: நடப்பு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இந்த தொடரில் அவர் வெல்லும் நான்காவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புவேர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தை சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றுள்ளார் புனியா.
2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.
அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் அவர். ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பதக்கமும் வென்றுள்ளார்.
Olympic bronze medallist Bajrang Punia wins his 4th medal at the world championships. He comes back from 0-6 down to beat Sebastian Rivera of Puerto Rico 11-9 to win bronze in the men's 65kg category at Belgrade.
2013
2018
2019
2022 pic.twitter.com/H5dc3EO3v1— jonathan selvaraj (@jon_selvaraj) September 18, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT