Published : 18 Sep 2022 05:05 AM
Last Updated : 18 Sep 2022 05:05 AM
லில்லிஹாமர்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1-ன் முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேக்கு எதிரான ஒற்றையர் பிரிவின் 2 ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்தனர்.
நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடைபெற்று வரும் இந்த மோதலில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 276-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 325-வது இடத்தில் உள்ள விக்டர் துராசோவிச்சை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் 1-6, 4-6 l என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 335-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன், உலகின் 2-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடிடம் 1-6, 4-6 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார். இந்த இரு வெற்றிகளின் மூலம் நார்வே அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT