Published : 16 Sep 2022 09:22 PM
Last Updated : 16 Sep 2022 09:22 PM
உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் தொடரில் யூ-16 பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார் இந்தியாவின் 76-வது கிராண்ட்மாஸ்டர் என அறியப்படும் பிரணவ் ஆனந்த். ருமேனியா நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் அவர் பட்டத்தை வென்றுள்ளார். இறுதிச் சுற்று ஆட்டத்தை அவர் சமனில் முடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப் தொடர் யூ-18, யூ-16 மற்றும் யூ-14 என மூன்று பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் ஓபன் 16 பிரிவில் பிரணவ் விளையாடி இருந்தார். 2494 ரேட்டிங் உடன் முதலிடம் பெற்று அந்த பிரிவில் சாம்பியனாகி உள்ளார். கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்த்தை எட்டிய சில மணி துளிகளுக்குள் சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்று அசத்தியுள்ளார். 15 வயதான அவர் பெங்களூருவை சேர்ந்தவர்.
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரனேஷ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் அண்மையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றிருந்தது. அதில் இந்திய அணியினர் பதக்கம் வென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Big news coming in from @FIDE_chess World Youth in Romania - subsequent to his Grandmaster title, Pranav Anand has added another feather to his cap. After drawing his final round game against FM Augustin Droin, Pranav is now the World U-16 Champion!! pic.twitter.com/h2htyNnJJU
— ChessBase India (@ChessbaseIndia) September 16, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT