Published : 16 Sep 2022 06:12 PM
Last Updated : 16 Sep 2022 06:12 PM

T20 WC | பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவரை சாடிய முகமது ஆமிருக்கு நெட்டிசன்கள் பதிலடி

முகமது ஆமிர்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அணியை தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவரை காட்டமாக விமர்சித்துள்ளார், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். அதன் காரணமாக அவர் சமூக வலைதங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் ஆமிர். மொத்தம் 259 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். 30 வயதான அவர் கடந்த 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவர் நேற்று வெளியிடப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணித் தேர்வை மேற்கொண்ட தேர்வுக்குழுவின் தலைவரை விமர்சித்துள்ளார். “தேர்வுக்குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான (Cheap) தேர்வு” எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். ‘நீங்கள் வீட்டில் உட்கார்ந்தபடி சாம்பியன்ஸ் கோப்பை ஹைலைட்ஸ் பாருங்கள்’, ‘நீங்கள் எப்படி பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து விளையாடி இருந்தீர்கள்’, ‘அவர் வாயால் அவப்பெயர் ஏற்படுத்திக் கொள்கிறார்’, ‘என்ன நடந்தாலும் உங்களை நாங்கள் அணிக்குள் தேர்வு செய்ய போவது கிடையாது’ என ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சிலர் அவரது சூதாட்ட சர்ச்சையை மேற்கோள் காட்டி கருத்துகளை உள்ளிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x