Published : 10 Nov 2016 03:56 PM
Last Updated : 10 Nov 2016 03:56 PM
பெர்த் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய ஆஸ்திரேலிய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பெரும் குழப்பத்தில் உள்ளது என்றும் அவர் வர்ணித்துள்ளார், மேலும் அந்த அணியில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்றார் கிரேம் ஸ்மித்.
“தொடர் தோல்விகள் மூலம் தன்னம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது. தற்போதைய ஏற்பாட்டில் வீரர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. ஏதோவொன்று சரியில்லை என்று எனக்கு உணர்த்துகிறது.
தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலிய அணி தேர்வு எனக்கு ஆச்சரியமளித்தது. 5-0 தோல்வி அவர்களை பலவீனப்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி திறமை என்ற காரணியை கொண்டு கட்டப்பட்டதாகும். மேலும் கடினமாக ஆடுவது என்ற பண்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அணியாகும். சுழற்சி முறையில் கோளாறா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது தெரியவில்லை. பலதரப்பு வீரர்களும் அணிக்குள் வருவதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சூழல் மீதான மதிப்பு குறைந்து விட்டதா என்றும் தெரியவில்லை.
டெஸ்ட் மற்றும் டி20-யை சிறிய இடைவெளியில் ஆடும் முடிவை ஜேம்ஸ் சதர்லேண்ட் எடுத்தது எனக்கு ஆஸ்திரேலிய தனமாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு ஆடுவது என்பது எவ்வளவு பெரிய கவுரவம் என்பது வீரர்களுக்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்போதைக்கு ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
புதிய கேப்டனாக செயல்படுவது குறித்து நான் ஸ்டீவ் ஸ்மித்தின் நிலையில் இருந்து தற்போது நினைத்துப் பார்க்கிறேன். நிறைய விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் ஒரு தனக்கேயுரிய பாணியிலான தலைவராக செயல்பட விரும்புகிறார் என்று தெரிகிறது. ஆனால் தற்போது முடிவுகள் அவருக்கு எதிராகச் சென்றுள்ளதால் அவர் தன்னை நோக்கியே ஏகப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது.
அதுவும் டேவிட் வார்னர் ஒருநாள், டி20 தொடர்களை இலங்கையில் தனது தலைமையில் வென்றதையடுத்து நிச்சயம் ஸ்மித்தை விட வார்னர் தகுதியானவரா என்ற கேள்வி எழவே செய்யும். இப்படிப்பட்ட சந்தேகங்களை, விவாதங்களை ஸ்மித் தனது அணுகுமுறையின் மூலம் மாற்ற வேண்டும். அவர் அதனை விரைவில் செய்ய வேண்டும்.
மாறாக ஃபா டுபிளெசிஸ் ஒரு கேப்டனாக வளர்ச்சியடைந்துள்ளார், தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பொறுப்பில் ஒரு வெற்றிடம் இருந்து வந்தது. உத்தி ரீதியாக ஃபா டுபிளெசிஸ், ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து விட்டார். தென் ஆப்பிரிக்க அணியை ஒருங்கிணைத்து பழைய ஒரு நிலைக்கு கொண்டு வருகிறார் டுபிளெசிஸ்” என்றார் கிரேம் ஸ்மித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT