Last Updated : 13 Sep, 2022 06:01 AM

 

Published : 13 Sep 2022 06:01 AM
Last Updated : 13 Sep 2022 06:01 AM

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்தியாவின் கர்மான் கவுர் முதல் சுற்றில் வெற்றி

கர்மான் கவுர் தண்டி

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் கர்மான் கவுர், கனடாவின் யுஜின் பவுச்சார்டு முன்னேறினர்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு வீராங்கனையான கனடாவின் யுஜின் பவுச்சார்டு 167-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் ஜோனா ஜூகரை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டில் ஜோனா ஜூகர் கடும் சவால் அளித்தார்.

டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை பவுச்சார்டு 7-6 (6-4) என கைப்பற்றினார். 2-வது செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பவுச்சார்டு 6-2 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (6-4), 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் ரெபேக்கா மரினோ, 149-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா பிளின்கோவாவை எதிர்கொண்டார். இதில் மரினோ 7-5, 6-2 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றது.

74-ம் நிலை வீராங்கனையான போலந்தின் கதர்ஸைனா ஹவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் 104-ம் நிலை வீராங்கனையான அஷ்ட்ரா ஷர்மாவை வீழ்த்தினார். 145-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹிபினோ 6-0, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஜனா ஃபெட்டை தோற்கடித்தார்.

இந்தியாவின் 2-ம் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 365-வது இடத்தில் உள்ளவருமான கர்மான் கவுர் தண்டி, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்திலும், உலகத் தரவரிசையில் 111-வது இடத்திலும் உள்ள பிரான்ஸின் சிலோயி பாக்கெட்டுடன் மோதினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இதில் கர்மான் கவுர் தண்டி 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x