Published : 11 Sep 2022 10:08 PM
Last Updated : 11 Sep 2022 10:08 PM
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி இலக்கை இப்போது விரட்டி வருகிறது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையின் ஃபைனலில் விளையாடி வருகின்றனர். இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அந்த அணி 62 ரன்களை எடுத்திருந்தது. அதன் பிறகு பனுகா ராஜபக்சே மற்றும் ஹசராங்கா ஆகியோர் இணைந்து 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் கடைசி 31 பந்துகளில் 54 ரன்களை குவித்தது ராஜபக்சே மற்றும் கருணரத்னே இணை. அதன் மூலம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது அந்த அணி. ராஜபக்சே, 45 பந்துகளில் 71 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது அந்த அணி.
A gritty knock from Bhanuka Rajapaksa #AsiaCup2022 | Scorecard: https://t.co/xA1vz7cSW0 pic.twitter.com/KUIGNdTwjv
— ICC (@ICC) September 11, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT