Published : 06 Sep 2022 09:32 PM
Last Updated : 06 Sep 2022 09:32 PM
துபாய்: இலங்கை அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 173 ரன்களை குவித்துள்ளது. தொடக்கத்திலேயே ராகுல் மற்றும் கோலி போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இருந்தாலும் அந்த நெருக்கடியிலிருந்து அணியை கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டனர்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்கள் களம் இறங்கி இருந்தனர். இரண்டாவது ஓவரில் ராகுல், 6 ரன்கள் எடுத்து தீக்ஷனா சூழலில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் 58 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தனர். ரோகித் 72 ரன்களிலும், சூர்யகுமார் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் வெளியேறினார். ஹூடா 3 ரன்களிலும், பந்த் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. இலங்கை அணி கடைசி ஐந்து ஓவர்களை சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அதன் காரணமாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டுகிறது.
Leading from the front, Captain @ImRo45 brings up a fine FIFTY off 32 deliveries
Live - https://t.co/JFtIjXSBXC #INDvSL #AsiaCup2022 pic.twitter.com/8ReqyqTS94— BCCI (@BCCI) September 6, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT