Published : 06 Sep 2022 04:50 AM
Last Updated : 06 Sep 2022 04:50 AM
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நடாலை வீழ்த்தியுள்ளார் 24 வயதான அமெரிக்க வீரர் ப்ரான்சைஸ் டைஃபோ(Frances Tiafoe). அதன் மூலம் அவர் இப்போது காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டி மொத்தம் நான்கு செட்களாக நடைபெற்றது. அதில் 6-4, 4-6, 6-4, 6-3 என முதல் மற்றும் கடைசி இரண்டு செட்களை வென்றார் டைஃபோ. கிராண்ட்ஸ்லாம் மேஜர் தொடரில் நடாலை வீழ்த்திய மூன்றாவது அமெரிக்கர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மிகவும் நிதானத்துடன் அவர் கடைசி இரண்டு செட்களை வென்றிருந்தார்.
இந்த தோல்வி நடாலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்ய நாட்டு வீரரை காலிறுதியில் எதிர்கொள்ள உள்ளார் டைஃபோ.
“இன்று ஒரு சிறப்பு நடந்துள்ளது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் விளையாடிய வீரர்களில் மிகச் சிறந்த வீரர் நடால் தான். நான் விளையாடிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை” என டைஃபோ தெரிவித்திருந்தார்.
This serve by Frances Tiafoe was NEXT LEVEL @Heineken_US Serve of the Day | #USOpen pic.twitter.com/Xnq9C30pNx
— US Open Tennis (@usopen) September 5, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT