Published : 05 Sep 2022 11:17 PM
Last Updated : 05 Sep 2022 11:17 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசி இருந்தார். அதன் மூலம் அவர் இழந்த ஃபார்மையும் மீட்டெடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, கோலியின் ஃபார்ம் குறித்து தெரிவித்த கருத்து இப்போது பலித்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்?
“நான் அவருடன் அண்மையில் பேசவில்லை. இருந்தாலும் பெரிய ஆட்டக்காரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்புவார்கள். அதனை அவரும் செய்வார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கோலி அரைசதம் விளாசுவார். அதன் மூலம் விமர்சகர்களின் வாயை அடைப்பார் என நம்புகிறேன். அவருக்கு தேவையானது ஒரே ஒரு தரமான இன்னிங்ஸ் மட்டுமே. அது கிடைத்தால் அனைத்தையும் கடந்து விடுவார்” என ரவி சாஸ்திரி அப்போது சொல்லி இருந்தார்.
இப்போது அது அப்படியே நடந்துள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க தடுமாறி வந்தார் கோலி. இருந்தும் நடப்பு ஆசிய கோப்பை இந்திய இதுவரை வென்றுள்ள மூன்று போட்டிகளிலும் கோலி முத்திரை படைத்துள்ளார். 35, 59* மற்றும் 60 ரன்களை இந்த மூன்று போட்டிகளில் அவர் எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT