இந்திய தொடருக்கான ஆஸி.யின் டி20 அணி அறிவிப்பு: வார்னருக்கு ஓய்வு!

(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
1 min read

சிட்னி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்தத் தொடருக்கு 15 வீரர்கள் அடங்கிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக டிம் டேவிட் அறிமுக வீரராக களம் காண்பார் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் டி20 தொடரில் விளையாட இந்தியாவை வரவுள்ளது. இந்தத் தொடர் வரும் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் மொகாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு சரியான முறையில் இரு அணிகளும் தயாராகும் வகையில் இந்தத் தொடர் அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன் விவரம்: ஆரோன் ஃபின்ச், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசல்வுட், இங்க்லீஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் சாம்பா மற்றும் கேமரூன் கிரீன்.

முன்னதாக, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், அணியில் அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அவருக்கு தொடர்ச்சியான கிரிக்கெட் அசைன்மென்ட் உள்ளதே இதற்கு காரணம் என தெரிகிறது. அவருக்கு மாற்றாக கேமரூன் கிரீன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல ஆஸ்திரேலிய தம்பதியருக்கு சிங்கப்பூரில் பிறந்தவரான டிம் டேவிட், ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சிங்கப்பூர் அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இனி வரும் நாட்களில் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார். அதனால் அவரும் இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in