Published : 29 Aug 2022 10:45 PM
Last Updated : 29 Aug 2022 10:45 PM
ஜெர்மன் நாட்டு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தற்போது அந்த அணி ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bundesliga தொடரில் விளையாடி வருகிறது. Oktoberfest கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அந்த அணியில் இடம் பெற்று விளையாடி வரும் Sadio Mané மற்றும் Noussair Mazraoui மது கோப்பையை கையில் ஏந்தாமல் போட்டோ எடுத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருபவர்கள். அதன் காரணமாக தங்க மத நம்பிக்கையின் அடிப்படையில் அதனை தவிர்த்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை பேயர்ன் அணி பின்பற்ற அனுமதித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் நடப்பு சீசனில் தான் அந்த அணியுடன் இணைந்துள்ளனர்.
பேயர்ன் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி நான்கு கோல்களை பதிவு செய்துள்ளார் அவர். விளையாட்டு உலகில் வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக கடந்த காலங்களில் இது போல செய்துள்ளனர். கொக்க கோலா பாட்டிலை தள்ளிவைத்து ரொனால்டோ, உஸ்மான் கவாஜாவுக்காக ஆஷஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஷாம்பெயின் கொண்டாட்டத்தை தவிர்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் என பலரை உதாரணமாக சொல்லலாம். சில வீரர்கள் தங்கள் ஜெர்சியில் மது வஸ்துவின் பெயரை இடம் பெற செய்யாமல் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Anzeige | Tracht statt Trikot: Unser Team beim traditionellen Lederhosen-Shooting von #Paulaner! #FCBayern #MiaSanMia pic.twitter.com/BWnXaxLX4W
— FC Bayern München (@FCBayern) August 29, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT