Published : 07 Jun 2014 06:30 PM
Last Updated : 07 Jun 2014 06:30 PM

கொல்கத்தா மாடல் அழகியை மணந்தார் கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹன் என்பவரைத் திருமணம் செய்தார்.

ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனைச் சந்தித்திருந்தார் மொகமது ஷமி.

மொராதாபாதில் நடைபெற்ற எளிமையான இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர்.

இந்திய வீரர்கள் ஒருவரும் திருமணத்திற்கு வரவில்லை. இதற்கான காரணத்தை மொகமது ஷமியின் தந்தை கூறுகையில், “ஷமியின் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை, காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை. எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார்.

வங்கதேசத் தொடருக்கு ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகே ஷமி கிரிக்கெட் விளையாடவுள்ளார். இடையே அவரது ஒரே சகோதரியின் திருமணமும் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x