Published : 26 Aug 2022 03:41 PM
Last Updated : 26 Aug 2022 03:41 PM
டோக்கியோ: நடப்பு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது, ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய சாத்விக் சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை. இந்தப் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் என்ற வகையில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
நடப்பு BWF உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் இந்தியா பங்கேற்றது. இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோக்கி மற்றும் கோபயாஷிக்கு எதிரான காலிறுதியில் 24-22, 15-21 மற்றும் 21-14 என விளையாடி இந்த ஆட்டத்தை வென்றுள்ளனர் சாத்விக் சாய்ராஜ் ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணையர்கள். அரையிறுதியில் மலேசிய நாட்டு வீரர்களுக்கு எதிராக அவர்கள் விளையாடுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனாய் தோல்வியை தழுவியுள்ளார்.
The moment when @satwiksairaj & @Shettychirag04 etched their name in the history books and sealed a place in the last-4 of the #BWFWorldChampionships2022 @himantabiswa | @sanjay091968
Video courtesy: @bwfmedia#BWFWorldChampionships#BWC2022#Tokyo2022#IndiaontheRise pic.twitter.com/O25tg4QMpn— BAI Media (@BAI_Media) August 26, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT