Published : 26 Aug 2022 03:11 PM
Last Updated : 26 Aug 2022 03:11 PM
துபாய்: தோனி உடனான பார்ட்னர்ஷிப்கள் எனக்கு என்றென்றும் ஸ்பெஷல்தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2008 வாக்கில் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்து, சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர் விராட் கோலி. இளம் வீரராக தோனி அணியில் இடம்பெற்று விளையாடிய கோலி பின்னாளில் தோனி அணியின் துணை கேப்டனாக உயர்ந்தவர். பின்னர் கோலி தலைமையிலான அணியில் தோனி விளையாடி இருந்தார். இப்படி அவர்கள் இருவரும் இணைந்து நெடுங்காலம் களம் கண்டுள்ளனர்.
எதிரணியின் பந்துவீச்சை இருவரும் இணைந்து துவம்சம் செய்த தருணங்களும் உண்டு. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் விராட் கோலி, தோனி குறித்து ட்வீட் செய்துள்ளார். இப்போது இந்திய அணியில் வீரராக மட்டுமே கோலி விளையாடி வருகிறார்.
“என்னுடைய கிரிக்கெட் கரியரில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான காலகட்டம் என்றால் அது இந்த மனிதரின் நம்பிக்கைக்குரிய துணை கேப்டனாக செயல்பட்ட காலம்தான். தோனி உடனான பார்ட்னர்ஷிப்கள் எனக்கு எப்போதும், என்றென்றும் ஸ்பெஷல் தான். 7+18” என இருவரது ஜெர்சி நம்பரையும் குறிப்பிட்டு கோலி ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டில் இருவரும் இணைந்து களத்தில் விளையாடிய படத்தை பகிர்ந்துள்ளார்.
Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 pic.twitter.com/PafGRkMH0Y
— Virat Kohli (@imVkohli) August 25, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT