Published : 23 Aug 2022 08:40 PM
Last Updated : 23 Aug 2022 08:40 PM
ஹொவ் (Hove): இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, நடப்பு ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது சதம் பதிவு செய்துள்ளார். 11 நாட்கள் இடைவெளியில் மூன்று சதங்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இங்கிலாந்தில் உள்ள முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடராகும்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும். களத்தில் சாலிடாக (Solid) நிலைத்து நின்று நிதானமாக ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார். ராயல் லண்டன் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் கூட.
இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் சசெக்ஸ் அணி ‘ஏ’ பிரிவில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி.
இன்று (ஆகஸ்ட் 23) Middlesex அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் சதம் விளாசினார் அவர். மொத்தம் 90 பந்துகளில் 132 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 20 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த தொடரில் மொத்தம் 614 ரன்களை எடுத்துள்ளார் அவர்.
முன்னதாக, கடந்த 14-ம் தேதி Surrey அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 131 பந்துகளில் 174 ரன்களை விளாசி இருந்தார் புஜாரா. கடந்த 12-ம் தேதி நடைபெற்ற Warwickshire அணிக்கு எதிரான போட்டியில் 79 பந்துகளில் 107 ரன்கள் விளாசி இருந்தார்.
அவரது ஆட்டம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கம்பேக்காக அமையுமா எனவும் ரசிகர்கள் வேடிக்கையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் சசெக்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 400 ரன்களை எடுத்தது.
A century from just 75 balls for @cheteshwar1.
Just phemeomenal. pic.twitter.com/z6vrKyqDfp
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT