Published : 19 Aug 2022 07:16 PM
Last Updated : 19 Aug 2022 07:16 PM

கால்பந்து உலகக் கோப்பை: 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக பிஃபா அறிவிப்பு: அதிக டிமாண்ட்டான போட்டிகள் எவை?

எதிர்வரும் கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடருக்கான மேட்ச் டிக்கெட்டுகளில் சுமார் 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) தெரிவித்துள்ளது. உலக அளவில் விளையாட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற விளையாட்டு தொடர்களில் இது ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரியாக 93 நாட்களில் (நவம்பர் 20) இந்த தொடர் ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 32 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொடருக்கான டிக்கெட்டுகளில் சுமார் 2.45 மில்லியன் டிக்கெட்டுகள் இதுவரையில் விற்பனையாகி உள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை பிஃபா தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்சிக்கோ, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், அர்ஜென்டீனா, பிரேசில் மற்றும் ஜெர்மனி சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் டிக்கெட்டுகளை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரையில் சுமார் 5,20,532 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரூன் - பிரேசில், பிரேசில் - செர்பியா, போர்ச்சுகல் - உருகுவே, கோஸ்டாரிக்கா - ஜெர்மனி, ஆஸ்திரேலியா - டென்மார்க் போன்ற அணிகளுக்கு இடையிலான குரூப் போட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு அதிகம் டிமாண்ட் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அடுத்த சுற்று டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெறும் முதல் கால்பந்து உலகக் கோப்பை தொடர் இது.

— FIFA Media (@fifamedia) August 18, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x