Published : 18 Aug 2022 05:41 AM
Last Updated : 18 Aug 2022 05:41 AM
லார்ட்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து திணறியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. அலெக்ஸ் லீஸ் 5, ஸாக் கிராவ்லி 9, ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களில் நடையை கட்டினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, பென் ஃபோக்ஸ் 6 ரன்களில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஆலி போப் சீராக விளையாடி அரை சதம் அடித்தார். இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆலி போப் 61 ரன்களும், ஸ்டூவர்ட் பிராடு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 3, காகிசோ ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment