Published : 14 Aug 2022 11:38 PM
Last Updated : 14 Aug 2022 11:38 PM
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு (DP) புகைப்படத்தில் தேசியக் கொடியை இடம் பெற செய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னதாக, தோனியும் இதே போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை தேசியக் கொடியை வைத்துள்ளார்.
இந்திய நாடு விடுதலை பெற்று 75 நாட்கள் நிறைவு அடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்தியர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என கோரியிருந்தார். ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதி வரை அனைவரும் இதனை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
பிரதமர் மோடியும் தனது சமூகவலைதள பக்கத்தில் முகப்பு படங்களை கடந்த 2-ம் தேதி வாக்கில் மாற்றி இருந்தார். அவரை தொடர்ந்து பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் தங்கள் சோஷியல் மீடியா ஹேண்டிலின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றி இருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றி இருந்தார். தற்போது அவரது வழியில் விராட் கோலியும் தேசிய கொடியை முகப்பு படமாக வைத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் என அனைத்திலும் இதே பாணியை பின்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT