Published : 10 Aug 2022 06:00 AM
Last Updated : 10 Aug 2022 06:00 AM
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், அர்மேனியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப் பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கமும் வென்றன. மகளிர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. 11 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் 2.5-1.5 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் அப்துசட்டோரோவ் நோடிர்பெக், யாகுபோவ் நோடிர்பெக், சிந்தரோவ் ஜாவோகிர் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்திருந்தனர்.
இளம் வீரர்களை உள்ளடக்கிய உஸ்பெகிஸ்தான் அணி போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் அர்மேனியா 12-வது இடம் வகித்தது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் தலா 19 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் டை-பிரேக் புள்ளிகளை உஸ்பெகிஸ்தான் அணி சிறப்பாக வைத்திருந்ததால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அர்மேனியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT