Published : 03 Aug 2022 02:23 AM
Last Updated : 03 Aug 2022 02:23 AM
பர்மிங்கம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் மலேசியாவை எதிர்த்து விளையாடியது இந்தியா. முதல் போட்டியான ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தோல்வி கண்டது. அடுத்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஜின் வெய் கோ-வை எதிர்கொண்டார். இதில், பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற நேர் செட்களில் ஜின் வெய் கோ-வை வீழ்த்தி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதனால், இரு நாடுகளும் ஒரு போட்டி வென்றுள்ள நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடினார். முன்னாள் உலக நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் லகின் 43-ம் நிலை வீரரான Ng Tze Yong-ஐ எதிர்கொண்டார். ஆனால், 19-21, 21-6, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த்.
அடுத்து நான்காவதாக பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி - டிரீசா ஜோடி களம் இறங்கினார்கள். இவர்கள் பேர்லி டான் மற்றும் தினா முரளிதரனை எதிர்கொண்டனர். இவர்களும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும், 18-21, 17-21 என்ற கணக்கில் மலேசிய அணி செட்டை கைப்பற்ற, 3-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது மலேசியா. இதனால் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கலப்பு ஆட்டமே பேட்மிண்டன் போட்டியில் இன்று முடிந்துள்ளது. இன்னும் இந்திய ஷட்லர்களின் பயணம் இன்னும் முடிவடையவில்லை. தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற இருப்பதால், இந்திய பேட்மிண்டன் வீரர்களின் பதக்க வேட்டை இன்னும் முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT