Published : 02 Aug 2022 06:37 PM
Last Updated : 02 Aug 2022 06:37 PM
சென்னை: ஆசிய கோப்பை 2022 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 28-ம் தேதி அன்று துபாயில் நடைபெறும் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளுக்கான தொடர்தான் ஆசிய கோப்பை. கடந்த 1984 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக கடந்த 2018-க்கு பிறகு இப்போதுதான் இந்தத் தொடர் நடைபெற உள்ளது. முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும். இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் குரூப் ‘பி’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றில் விளையாடும்.
தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். துபாய் மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆசிய கோப்பையில் இந்தியாவின் சாதனை: அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற அணியாக இந்தியா திகழ்கிறது. 13 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று, மொத்தம் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்தியா. மூன்று முறை ஃபைனல் வரை முன்னேறி உள்ளது.
The wait is finally over as the battle for Asian supremacy commences on 27th August with the all-important final on 11th September.
The 15th edition of the Asia Cup will serve as ideal preparation ahead of the ICC T20 World Cup. pic.twitter.com/QfTskWX6RD
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT